கொல்கத்தாவில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு இரயிலில் அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் பயணம் செய்துள்ளனர்.
ரயில் சென்னை எழும்பூர் வரும்போது முனபதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு பதிலாக, அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்துள்ளனர். இதனால் எழும்பூரிலிருந்து முன்பதிவு செய்த பயணிகள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர்.
முன்பதிவு செய்தவர்கள் தங்களது இருக்கைகளில் அமர்ந்த நிலையிலும் வடமாநிலத்தவர்கள் – தமிழர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
அதிகமாக பெண்கள் பயணித்த பெட்டிகளில் அரைகுறை ஆடைகளுடன் வடமாநிலத்தவர்கள் பயணித்த நிலையில் பெண்கள் மூன்று முறை ரயிலை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி வரை செல்லும் வாராந்திர சிறப்பு இரயிலில் முனபதிவு செய்த பெட்டிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் முன்பதிவில்லாமல் பயணம் செய்வதாக கூறப்படுகிறது.