நேபாளத்தில் பயணிகள் விமானம் ஒன்று மாயமாகியுள்ளது. டாரா ஏர்லைன்ஸின் ட்வின் ஓட்டர் ரக இரட்டை இஞ்சின் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை காற்று கட்டுப்பாட்டு அமைப்புடனான தொடர்பை இழந்தது. இந்த விமானத்தில் நான்கு இந்தியர்கள் உட்பட மொத்தம் 22 பேர் இருந்தனர்.
பொக்காராவிலிருந்து ஜோம்சோமுக்கு காலை 9.55 மணிக்கு புறப்பட்ட விமானம் மாயமாகி உள்ளது.
இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உள்பட 22 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் இருந்த இந்தியர்கள் வைபவி பண்டேகர், அசோக் குமார் திரிபாதி, தனுஷ் திரிபாதி மற்றும் ரித்திகா திரிபாதி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.