Saturday, April 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்நாடாளுமன்ற மாநிலங்ளவை உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம்

நாடாளுமன்ற மாநிலங்ளவை உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம்

நாடாளுமன்ற மாநிலங்ளவை நியமன எம்.பி க்களாக இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, விஜயேந்திர பிரசாத் ஆகியோரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

மாநிலங்களவை நியமன எம்.பி.களாக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜா உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் மொத்தம் 12 பேர் நியமன எம்.பி.க்களாக பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் தற்போது இசைஞானி இளையராஜாவுக்கு நியமன எம்.பி.பதவி வழங்கப்பட்டுள்ளது.

2010-ம் ஆண்டு மத்திய அரசு இளையராஜாவுக்கு பத்ம பூஷன் விருதும், 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கி சிறப்பித்தது

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அப்பதிவில் சாதாரண பின்னணியில் இருந்து வந்த இளையராஜா மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார்.

மனித உணர்வுகளை இசையின் வாயிலாக அழகுற பிரதிபலித்தவர் இளையராஜா; அவர் நாடாளுமன்ற எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

1976-ம் ஆண்டு அன்னக்கிளி எனும் தமிழ் திரைப்படம் மூலம் திரை உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர்

இளையராஜா. இன்றுவரை 1000-க்கும் மேற்பட்ட திரைப் படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பெரும்பாலான இந்திய மொழி திரைப்படங்களுக்கும் ஆங்கில படங்களுக்கும் இசையமைத்துள்ளார் இளையராஜா.

சிம்பொனி இசையின் மூலம் உலகை தன் வயப்படுத்தியவர் இளையராஜா
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதி இருந்தார் இளையராஜா.

அது மிகப் பெரும் சர்ச்சையானது. அப்போதே இளையராஜாவுக்கு ஏதோ ஒரு பதவியை மத்திய அரசு தரக் கூடும் என்கிற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று இளையராஜா, நியமன எம்.பி.யாக நியமிக்கப் பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கிரிக்கெட் இரசிகர்களை கவர கிரிக்கெட் வீரர் டெண்டுல்கருக்கு நியமன எம்.பி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நியமன எம்.பிக்களாக பொறுப்புக்கு வந்தவர்களில் ஒரு சிலர் தவிர, வேறு எவரும் தங்களின் ஆறு ஆண்டு கால பதவி காலத்தில் தங்கள் பங்களிப்பை மணிலங்கவையில் சரிவர நிறைவேற்றுவதில்லை என்ற விமர்சனங்கள் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஹைதராபாத்தில் நிகழ்ந்த பா.ஜ.க கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது, பா.ஜ.க வின் அடுத்த இலக்கு தெற்கிலிருந்து என்று குறிப்பிட்டார்.

தற்போது நியமன எம்.பிக்களாக நியமிக்கப்பட்டுள்ள நபர்கள் தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

Recent Comments