Thursday, June 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுநாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுனர் உரிமம் - மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுனர் உரிமம் – மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் சர்வதேச ஓட்டுனர் உரிமம் அளிப்பதில் குடிமக்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் சர்வதேச ஓட்டுனர் உரிமம் அளிப்பதில் குடிமக்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அளிக்கப்படும் சர்வதேச ஓட்டுனர் உரிமங்களின் வடிவம், அளவு, முறை, வண்ணம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்து வருகின்றன.

இதன் காரணமாக வெளிநாடுகளில் இந்த சர்வதேச ஓட்டுனர் உரிமத்தைப் பயன்படுத்தும் குடிமக்கள் சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் இந்த திருத்தத்தின் காரணமாக ஜெனீவா ஒப்பந்தத்தின்படி நாடு முழுவதும் ஒரே மாதிரியான நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுனர் உரிமம் அளிக்கப்படுகிறது.

ஓட்டுனர் உரிமத்துடன் சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை இணைப்பதற்கு கியூஆர் கோடு விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உதவி எண்களும் மின்னஞ்சல் முகவரிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments