Wednesday, May 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஅழிந்த சிறுத்தை இனம் - 74 ஆண்டுக்குப் பின் இந்தியா வருகிறது

அழிந்த சிறுத்தை இனம் – 74 ஆண்டுக்குப் பின் இந்தியா வருகிறது

1948ல் இந்தியாவின் கடைசி சிறுத்தை இறந்தது.

அதன்பிறகு நாட்டில் சிறுத்தை இனம் அழிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சிறுத்தை இனத்தை பெருக்கும் நோக்கில் நமீபியா நாட்டில் இருந்து 8 சிறுத்தைகளை இந்தியா பெற உள்ளது.

சிறுத்தைகளை அழைத்து வருவதற்காக புலி வடிவ டிசைனுடன் சிறப்பு விமானம் நமீபியா சென்றடைந்தது.

இதற்காக, சிறப்பு விமானத்தில் இந்த சிறுத்தைகள், நமீபியாவில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு, வரும் 17ம் தேதி காலையில் அந்த விமானம் வருகிறது.

அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக, இந்த சிறுத்தைகள் மத்திய பிரதேசத்துக்கு எடுத்து வரப்பட உள்ளன.

பிரதமர் மோடி தன் பிறந்த நாளான 17ம் தேதி, இந்த சிறுத்தைகளை, குனோ தேசிய பூங்காவில் திறந்து விடுகிறார்.

இதற்காக இன்று இந்தியாவில் இருந்து நமீபியா சென்றடைந்த சிறப்பு விமானத்தில் நமது தேசிய விலங்கான புலி வடிவில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments