குமரியில் பிராத்தனை நடைபெறும்போது தேவாலயத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து முன்னணி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், லண்டன் மிஷன் சபை கடந்த 30 வருடங்களாக வீரபகுபதி என்ற பகுதியில் செயல்பட்டு வருகிறது. நேற்றைய தினம் ஞாயிற்றுகிழமை அமைதியாக பிராத்தனை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் தேவாலயத்துக்குள் புகுந்து ரகளை செய்துள்ளனர். மத கலவரத்தை குமரி மாவட்டத்தில் ஏற்படுத்தும் நோக்குடன் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என்று குமரி மக்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
குமரி மாவட்டத்தின் அமைதியை சீர்க்குலைக்கும் இவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது?
இந்த காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருவதால் குமரி மாவட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.