இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர திட்டம் வகுத்துள்ளார். இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் பேசியாதாவது:
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நமது நிலைமையை விவரிப்பதற்கு டில்லி வர விரும்புவதாக பிரதமர் மோடியிடம் நான் தெரிவித்தேன். நமக்கு இந்தியா செய்துவரும் உதவியை எப்போதும் பாராட்டுகிறேன். நமது மறுகட்டமைப்பு முயற்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.