Tuesday, October 3, 2023
Home உலகம் இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேற்றம் - இந்தியா புறக்கணிப்பு, சீனா, பாகிஸ்தான் எதிர்ப்பு

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேற்றம் – இந்தியா புறக்கணிப்பு, சீனா, பாகிஸ்தான் எதிர்ப்பு

ஜெனீவா

ஐநாவில் இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்து உள்ளது

ஜெனிவாவில் இப்போது ஐநா மனித உரிமை கவுன்சிலின் 51வது அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது.

மொத்தம் 47 நாடுகளைக் கொண்ட ஐநா மனித உரிமை கவுன்சிலில் 20 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. ஏழு நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்த நிலையில், இந்தியா உட்பட 20 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்துவிட்டன.

தீர்மானத்திற்கு எதிராக விழுந்த வாக்குகளை விட ஆதரவாக விழுந்த வாக்குகள் அதிகம் என்பதால் இந்தத் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, மெக்சிகோ, உக்ரைன் உள்ளிட்ட 20 நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து இருந்தது. இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது

இந்தியா மட்டுமின்றி ஜப்பான், நேபாளம், கத்தார் உள்ளிட்ட 20 நாடுகள் இதைப் புறக்கணித்த நிலையில், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஏழு நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்து இருந்தது. இலங்கைத் தமிழர்களின் நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்வதும் இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று தெரிவித்த ஐநாவுக்கான இந்தியத் தூதர் இந்திராமணி பாண்டே, நிலைமையை மேம்படுத்த இலங்கை மற்றும் சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று கூறினார்.

2009க்குப் பிறகு இலங்கையில் நிவாரணம், குடியேற்றம் மற்றும் புனரமைப்பு பணிகளுக்கு இந்தியா கணிசமான பங்களிப்பை வழங்கி உள்ளதாகவும் சமீபத்தில் அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் சவால்களை எதிர்கொள்ளவும் இலங்கை மக்களுக்கு இந்தியா உதவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பயனுள்ள தீர்வைக் கண்டறிவது மற்றும் அங்குள்ள தமிழர்களுக்குச் சமத்துவம், நீதி, அமைதி பெற்றுத் தருவது ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தியா முடிவுகளை எடுத்து வருகிறது என்று ஐநாவுக்கான இந்தியத் தூதர் இந்திராமணி பாண்டே தெரிவித்தார்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments