மேட்டூர் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் உபரி நீர் திறந்து விடப்படலாம் என்பதால் தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.