நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை பல நாடுகளில் இருந்தும் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக தங்கி செல்லும்.
இங்கு வரும் 247 வகையான பறவைகளில் 50 வகை நிலப்பறவைகளும், 200க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளும் அடக்கம். இந்த ஆண்டு 58 ஆண்டுகளுக்குப் பின் “ஹிமாலய கிரிபன் கழுகு” மற்றும் 3 ஆண்டுகளுக்கு பிறகு வரித்தலை வாத்தும் வந்துள்ளன.