அமீரக காங்கிரஸ் கட்சியின் தலைவரும் இளம் தொழில் அதிபருமான தமிழகத்தை சார்ந்த டாக்டர். A.S. அப்துல் மாலிக் க்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரபடுத்தி உள்ளது.
பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும் மற்றும் பெரு முதலீடு செய்யும் தொழில் அதிபர்களுக்கும் கோல்டன் விசா வழங்கப்படுகிறது. லூலு யூஸுஃப் அலி, உலக புகழ் பெற்ற முன்னனி நடிகர்கள் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், சரத்குமார், பார்த்திபன், விஜய் சேதுபதி, திரிஷா மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பத்து வருட கோல்டன் விசா வழங்கி கவுரவ படுத்தி வருகிறது.
இதை தொடர்ந்து அமீரக காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர் A.S.அப்துல் மாலிக்-க்கு போலிஸ் உயர் அதிகாரி உமர் அல் மர்ஜூக்கி கோல்டன் விசாவை வழங்கி கவுரவ படுத்தினார்.
இந்த நிகழ்வுக்கு சர்வதேச வர்த்தக குழுமத்தின் தலைவரும், அமீரக திமுக அமைப்பின் தலைவர் அன்வர் அலி மற்றும் சர்வதேச வர்த்தக குழுமத்தின் பொதுச் செயலாளர் ஷாநவாஸ், செயலாளர் ராஜா அமீரக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பீர் முஹம்மது மற்றும் சிங்கப்பூர் ஹவுஸ் தொழில் அதிபர் அப்துல்லா, நஜீர் அஹமது மற்றும் முஹம்மது ஜர்ஜீஸ், கேரளாவைச் சார்ந்த அப்துல் காதர் ஷாஹ்ஜாத் மற்றும் அமீரக அரசாங்க அதிகாரிகள் உடன் இருந்து வாழ்த்து தெரிவித்தனர்.