பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்க முடிவு செய்த யுனெஸ்கோ அமைப்பு, உலக வேட்டி தினம் கொண்டாட 2015ம் ஆண்டு அறிவுறுத்தியது.
அதை ஏற்ற இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6ம் தேதி வேட்டி தினம் அனுசரிக்க உத்தரவிட்டது. அன்று முதல் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. கைத்தறி நெசவுத் தொழிலை காப்பதுதான் இந்த தினத்தின் முக்கிய நோக்கம்.