சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் பூஜ்ய கொரோனா கொள்கை தளர்த்தப்பட்டதில் இருந்து கொரோனா அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி அங்கு 2.18 கோடி பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பின் வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 5 புதிய இறப்புகளை சீனா அறிவித்ததில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,258 ஆக உள்ளது.