தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கோவையில் பொங்கல் பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
மேலும் நெல்லை, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் செய்யப்படும் பானைகளும் கோவைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. உலோக பாத்திரத்திரங்களுக்கு பதிலாக மண்பானையில் பொங்கல் வைக்க வேண்டும் என்பதே மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.