இந்தியாவுடன் 3 முறை போரிட்டு, பல்வேறு பாடங்களை பாகிஸ்தான் கற்றுக் கொண்டுவிட்டது.
போரினால் வறுமை, வேலைவாய்ப்பின்மை மட்டுமே உருவாகும். அதை ஏற்கெனவே உணர்ந்துள்ளோம். அதனால், காஷ்மிர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் அமைதியான முறையில் பேசி, அதற்குரிய தீர்வுகளை காண வேண்டும் என, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் கூறியுள்ளார்.