இந்திய வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகக் குளிர் உச்சம் தொட்டுள்ளது.
டில்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், பீகார், இமாச்சலப்பிரதேசம், குஜராத் மாநிலங்களில் ஜனவரி 18, 19ம் தேதிகளில் கடும் குளிர் அலை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டிலும் குளிர் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.