Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்துருக்கி நிலநடுக்கத்தை சரியாக கணித்த ஆய்வாளர் இந்எதியாவுக்கு எச்சரிக்கை

துருக்கி நிலநடுக்கத்தை சரியாக கணித்த ஆய்வாளர் இந்எதியாவுக்கு எச்சரிக்கை

துருக்கி நிலநடுக்கத்தை சரியாக கணித்த ஆய்வாளர் பிரான்க் ஹூகர்பீட்ஸ் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரான்க் ஹூகர்பீட்ஸ் இந்தியா பாகிஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துருக்கி, சிரியா எல்லையில் கடந்த 6 ந்தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.

மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

துருக்கி – சிரியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில், இந்த நிலநடுக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே ஒருவர் துல்லியமாக கணித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தை அது ஏற்பட மூன்று நாட்களுக்கு முன்பே அப்பகுதியில் வலிமையான நிலநடுக்கம் ஏற்படும் என்பதை நெதர்லாந்து ஆய்வாளர் ஃபிரான்க் ஹூகர்பீட்ஸ் கணித்திருந்தார்.

- Advertisment -

Most Popular

Recent Comments