2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.16,884 கோடி நிகர லாபத்தை ஈட்டி SBI வரலாற்று சாதனை படைத்துள்ளது.
குறைந்த வாராக் கடன் & அதிக வட்டி வருமானம் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு பொதுத்துறை வங்கியான SBI மிக அதிக காலாண்டு லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
இதன் காரணமாக மொத்த வருமானம் ரூ.1,08,039 கோடியாக உயர்ந்துள்ளது.கடந்த 2022-23 நிதியாண்டில் இதே காலப்பகுதியில் ரூ.6,068 கோடி மட்டுமே ஈட்டியது.