டொரான்டோ
இந்தியா – கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து அந்நாட்டின் பொது பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிக்கையில், இதுபோன்ற வீடியோக்களை பரப்புவது கண்டிக்கத்தக்கது, அருவருப்பானது. இது கனடா மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது. கனடாவில் வெறுப்புணர்வுக்கு இடமில்லை.
ஆக்கிரமிப்பு, வெறுப்பு, மிரட்டல் அல்லது பயத்தை துாண்டும் செயல்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை. அவை நம்மைப் பிளவுபடுத்த மட்டுமே உதவுகின்றன.
கனடா மக்கள், ஒருவரையொருவர் மதிக்கவும், சட்டத்தை பின்பற்றும்படியும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.