Monday, December 4, 2023

தமிழகம்

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தனர். குறிப்பிட்ட முதிர்வு காலத்தில் பணத்தை திரும்ப அளிக்காமல், முதலீடுகளை பெற்று விஸ்வபிரியா நிதி நிறுவனம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து வேளச்சேரியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் கடந்த 2013-ஆம் ஆண்டு புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட், அதன் துணை நிறுவனங்களான அக்ஷயபூமி இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் என, 17 நிதி நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குநர்கள் சுபிக்ஷா சுப்பிரமணியன், நாராயணன், ராஜரத்தினம், பாலசுப்பிரமணியன், அகஸ்டின், கணேஷ் உள்பட 17 பேர் மீது, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்து, 2020 ஆண்டு காவல்துறை...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் அபராத தொகையை உயர்த்த முடிவு. மாடு முதல்முறையாக பிடிக்கப்பட்டால் ₹5,000 அபராதம், மீண்டும் பிடிக்கப்பட்டால் ₹10,000 அபராதமாக வசூலிக்கப்படவுள்ளது.

இலங்கை

யாழ்ப்பாணத்திலிருந்து புதுச்சேரிக்குக் கப்பல் சேவை – இலங்கை கப்பல் துறை அமைச்சர்

இலங்கை அரசு யாழ்ப்பாணத்திலிருந்து புதுச்சேரிக்குக் கப்பல் சேவையைத் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக இலங்கை துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா செய்தியாளர்களிடம் கூறியதாவது: யாழ்ப்பாணம் - காங்கேசன் துறை துறைமுகத்தையும் தமிழ்நாட்டின் புதுச்சேரியையும் இணைக்கும் வகையில் கப்பல் சேவை அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது. இந்த சேவைக்கு இந்திய அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த பயணிகள் சொகுசு கப்பல் சேவையானது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை வலுப்படுத்தவும், நட்புறவுடன் இருக்க வாய்ப்பாகவும் அமையும் எனவும், இதனைத் தொடர்ந்து, தென்னிந்தியாவிலிருந்து திருகோணமலை மற்றும் கொழும்பு வரையும் இந்த கப்பல் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும். அதற்காகத் துறைமுகங்களில் சுங்கம், குடிவரவு மற்றும் ஏனைய வசதிகள் தொடர்பான உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது‌. இந்த சொகுசு கப்பலில் 400 பயணிகள் வரை பயணம் செய்யலாம். யாழ்ப்பாணத்திலிருந்து புதுச்சேரிக்கு மூன்றரை மணி நேரம் கடலின் அழகை ரசித்தபடி பயணிக்கும்...

இலங்கை அதிபர் மாளிகையை சீரமைக்க ரூ.8.17 கோடி செல்வாகும் – பொறியியல் துறை அறிக்கை

கொழும்பு போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்ட இலங்கை அதிபர் மாளிகையை சீரமைக்க ரூ.8.17 கோடி செல்வாகும் என பொறியியல் துறை அறிக்கை தாக்கல் செய்ததுள்ளது. மாளிகையின் வரலாற்று ஓவியங்கள், உடற்பயிற்சி மைய உபகரணங்கள், வாகனங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர திட்டம்

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர திட்டம் வகுத்துள்ளார். இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் பேசியாதாவது: இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நமது நிலைமையை விவரிப்பதற்கு டில்லி வர விரும்புவதாக பிரதமர் மோடியிடம் நான் தெரிவித்தேன். நமக்கு இந்தியா செய்துவரும் உதவியை எப்போதும் பாராட்டுகிறேன். நமது மறுகட்டமைப்பு முயற்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சினிமா

லியோ டிரெய்லர் சர்ச்சை – காவல்துறையில் புகார்

லியோ டிரெய்லரால் வெடித்த சர்ச்சை - புதிய சிக்கல் லியோ டிரெய்லர் சர்ச்சை - போலீசில் புகார் லியோ படக்குழு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் லியோ பட டிரெய்லரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தையை நீக்கக்கோரி புகார் மனு விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ படம் வரும் 19ஆம் தேதி வெளியாகும் நிலையில், நேற்று முன் தினம் டிரெய்லர் வெளியானது "நடிகர் விஜய் முன்னுதாரணமாக செயல்படாமல் ஆபாச வார்த்தையை பயன்படுத்தினால் நிஜ வாழ்க்கையில் எதிரொலிக்கும்" டிரெய்லரை தணிக்கை செய்யாமல் யூடியூபில் வெளியிட்ட படக்குழு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

லியோ படத்தின் “நா ரெடி” பாடலில் எச்சரிக்கை வாசகம் சேர்ப்பு

லியோ படத்தின் “நா ரெடி” பாடலில் எச்சரிக்கை வாசகம் சேர்ப்பு விஜய் சிகரெட் பிடிப்பது போன்று வரும் காட்சிகளில் “புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும், உயிரை கொல்லும்” என்ற வாசகம் சேர்ப்பு. பாடலுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் எச்சரிக்கை வாசகத்தை சேர்த்தது படக்குழு.

ஆன்மீகம்

இந்த சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ3.924 கோடி மதிப்புடைய கோயில் நிலங்கள் மீட்பு – அமைச்சர் சேகர் பாபு

திருவள்ளூர் இந்த சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ3.924 கோடி மதிப்புடைய கோயில் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். அறநிலையத்துறைக்கு சொந்தமான 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு பெரியபாளையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வைகுண்ட ஏகாதசி – திருப்பதியில் ஜன.2ல் சொர்க்கவாசல் திறப்பு

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பத்து நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ₹300 கட்டணத்தில் பரமபத வாசல் வழியாக தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி பண்டிகை வைஷ்ணவ பக்தர்களுக்கு சிறப்பு வாய்ந்த பண்டிகையாகும். மார்கழி மாதம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா பெருமாள் கோவில்களில் நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா பகல்பத்து உற்சவம் நேற்று முதல் தொடங்கியுள்ளது.

ஆன்மீகவாதி கருத்து சொல்லக்கூடாதா? – மதுரை ஆதீனம்

குருபூஜையன்று தருமபுரம் ஆதீனத்தைப் பல்லக்கில் பக்தர்கள் தூக்கிச் செல்வார்கள். ஆதீனங்கள் பல்லக்கில் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமென்பதால் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆன்மிகமும் அரசியலும் ஒன்றுதான். மடத்துப் பிரச்சினையை மத பிரச்சனையாக ஆக்கியது யார்? அரசியல்வாதி என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆன்மீகவாதி பேசக்கூடாதா? என, மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

வர்த்தகம்

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகித்தை ரிசர்வ் வங்கி மாற்றம் செய்யவில்லை

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகித்தை ரிசர்வ் வங்கி மாற்றம் செய்யவில்லை எனவும், ரெப்போ வட்டி 6.5 சதவீதமாக நீடிக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் வீடு, வாகன, தனி நபர் கடன் தவணையில் மாற்றம் இருக்காது. ரிசர்வ் வங்கி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்துகிறது. இதில் வட்டி விகிதத்தில் மாற்றம் உட்பட பல்வேறு கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்த மாதத்துக்கான கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 6.5 சதவீதமாகவே நீடிக்கும். இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நிதிக்கொள்கை சீராய்வு கூட்டத்தில் பங்கேற்ற 6 பேர் செய்ய வேண்டாம் என ஏகமனதாக பரிந்துரை செய்துள்ளனர். 4 வது...

குறைந்த விலை S1X இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஓலா நிறுவனம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓலா தொழிற்சாலையில் தயாராகும் குறைந்த விலை மின்சார இருசக்கர வாகனம் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. S1X என்ற புதிய மாடல் இ-ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் போட்டி நிறுவனங்களை காட்டிலும் குறைந்த விலையில் ரூ.80,000-க்கு இந்த இ-ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. 2 கிலோ வாட் பேட்டரியுடன் கூடிய ஓலா S1X ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஒரு வாரத்திற்கு சலுகை விலையிலான ரூ.80,000-க்கும், அதன்பிறகு ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. S1X மாடல் இ-ஸ்கூட்டர்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கிலோமீட்டர் வரை செல்லும் எனவும், அதிகப்படச வேகம் மணிக்கு 90 கிலோமீட்டர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றிலேயே மிக அதிக லாபம் ஈட்டிய எஸ்பிஐ வங்கி

2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.16,884 கோடி நிகர லாபத்தை ஈட்டி SBI வரலாற்று சாதனை படைத்துள்ளது. குறைந்த வாராக் கடன் & அதிக வட்டி வருமானம் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு பொதுத்துறை வங்கியான SBI மிக அதிக காலாண்டு லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக மொத்த வருமானம் ரூ.1,08,039 கோடியாக உயர்ந்துள்ளது.கடந்த 2022-23 நிதியாண்டில் இதே காலப்பகுதியில் ரூ.6,068 கோடி மட்டுமே ஈட்டியது.

இந்தியா

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்து இருக்கிறது சில்க்யாரா சுரங்கம். இமயமலையை ஒட்டிய பகுதியில் அமைந்து உள்ள இந்த சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சுரங்கம் இடிந்து விழுந்து அதை வழி அடைபட்டது. இதன் காரணமாக 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கித் தவிக்கின்றனர். 10 நாட்களுக்கும் மேலாக அவர்கள் சுரங்கத்திற்கு உள்ளேயே உயிருக்கு போராடி வருகின்றனர். வர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் என ஏராளமான வீரர்கள் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்....

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி அல்ட்ரா மாடர்ன் ஆக இருக்கிறார். அவர் அமர்ந்திருக்கும் மேடை கூட புதிதாக உள்ளது. அவர் அமர்ந்து இருக்கும் மேடையை சுற்றி சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு உள்ளது. இப்படி ஒரு செருப்புத் தைக்கும் கடையை இந்தியாவில் எங்காவது பார்த்ததுண்டா? பிரதமர் மோடியுடனான இந்த விளம்பரப் படத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளியாக நடித்து இருப்பவர் யார் என்பது தெரியவில்லை. ஆனால் இதெல்லாம் எப்படி? என்று மக்கள் திகைக்கிறார்கள். சிறந்த ஒரு இயக்குனரை வைத்து விளம்பர படம் எடுப்பது பிரதமர் மோடி அவர்களுக்கு நல்லது. ஆனாலும் இந்திய மக்கள் நம்பவேண்டுமே?

அண்மை காலமாக பலர் மாரடைப்பால் உயிரிழப்பதற்கு கொரோனாவே காரணம் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விரிவான ஆய்வை நடத்தியுள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாரடைப்பிற்கான காரணத்தை விளக்கினார்: கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு மற்றும் இதய பாதிப்பை தடுக்க ஓரிரு ஆண்டுகள் கடுமையாக உழைக்கக் கூடாது என்றும் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்யக்கூடாது என்றும் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தினார். இதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விரிவான ஆய்வை நடத்தியுள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாரடைப்பிற்கான காரணத்தை விளக்கினார்: கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு மற்றும் இதய பாதிப்பை தடுக்க ஓரிரு ஆண்டுகள் கடுமையாக உழைக்கக் கூடாது என்றும் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து...

உலகம்

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து அந்நாட்டின் பொது பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிக்கையில், இதுபோன்ற வீடியோக்களை பரப்புவது கண்டிக்கத்தக்கது, அருவருப்பானது. இது கனடா மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது. கனடாவில் வெறுப்புணர்வுக்கு இடமில்லை. ஆக்கிரமிப்பு, வெறுப்பு, மிரட்டல் அல்லது பயத்தை துாண்டும் செயல்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை. அவை நம்மைப் பிளவுபடுத்த மட்டுமே உதவுகின்றன. கனடா மக்கள், ஒருவரையொருவர் மதிக்கவும், சட்டத்தை பின்பற்றும்படியும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலையாகி இந்தியா வந்த 198 மீனவர்கள்

இந்திய கடல் எல்லையை தாண்டி சட்டவிரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு கராச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கிருந்த 198 இந்திய மீனவர்கள் நேற்று (மே 12) விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் முதலில் லாகூருக்கு அனுப்பப்பட்டனர். பின் வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

துருக்கியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

துருக்கி நாட்டின் அப்சின் நகரில் 23 கிமீ தென்மேற்கே இன்று (ஏப்.17) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆகப் பதிவானது. நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. சேதம் குறித்த விவரங்கள் வெளிவரவில்லை.

விளையாட்டு

மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆடிய ஆஸ்திரேலியா ஒவர்களில் 7 விக்கட்டுகளையும் இழந்து 292 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் தனி ஆளாக களமாடி 201 ரன்களை எடுத்து அசத்தினார். கேப்டன் கம்மின்ஸ் மிக மிக பொறுமையாக மேக்ஸ்வெல்லை அடிக்கவிட்டு பார்த்து மகிழ்ந்தார். கம்மின்ஸ் 68 பந்துகளை சந்தித்து 12 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. 46.5 ஓவர்களில் ஆஸ்த்திரேலியா ஆட்டத்தை முடித்தது.

விராட் கோலி சாதனை

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுப்போட்டியில் கே.எல்.ராகுலும், விராட் கோலியும் சதமடித்து, பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடினர். ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 83 பந்துகளில் சதம் விளாசினார். 2 சிக்ஸர்ஸ், 6 பவுண்டரிகளை அடித்து மிரட்டினார். மொத்தம் 94 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் அதிவேகமாக 13,000 (267 இன்னிங்ஸ்) ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோலி. அதேபோல சர்வதேச ஒருநாள் போட்டியில் கோலியின் 47வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் கொழும்பு பிரமேதசா மைதானத்தில் (2012, 2017, 2017 மற்றும் 2023) தொடர்ச்சியாக 4 ஒருநாள் போட்டிகளில் சதத்தை பதிவு செய்துள்ளார் விராட் கோலி.

ருமேனியா – சர்வதேச வலுதூக்கும் போட்டியில் திருச்சியை சேர்ந்த மாணவர் மற்றும் மாணவி சாதனை

ருமேனியாவில் நடக்கும் சர்வதேச வலுதூக்கும் போட்டியில் திருச்சியை சேர்ந்த மாணவர் மற்றும் மாணவி சாதனை படைத்துள்ளனர். வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டுள்ள +2 மாணவரான தினேஷ் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளார். அதேபோல கல்லூரி மாணவி ஜீவிதா வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய சர்வதேச அளவிலான வலுதூக்கும் போட்டி செப்.3ஆம் தேதி வரை நடக்க உள்ளது.

பொது

ஜெயப்பிரதா, 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து ₹20 லட்சம் வைப்புதொகை கட்ட வேண்டும் – உயர்நீதிமன்றம்

ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா, 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து ₹20 லட்சம் வைப்புதொகை கட்ட வேண்டும் என ஜெயப்பிரதா உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. திரையரங்கு ஊழியர்களிடம் வசூலித்த இ.எஸ்.ஐ. தொகையை செலுத்தாதது தொடர்பான வழக்கில் உத்தரவு.

யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து

10 ஆண்டுகளுக்கு டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து போக்குவரத்து துறை உத்தரவு 06.10.2023 முதல் 05.10.2033 வரை 10 ஆண்டுகளுக்கு காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து சமீபத்தில் காஞ்சிபுரம் அருகே பைக்கில் அதிவேகமாக ஓட்டி டி.டி.எஃப். வாசன் விபத்தில் சிக்கினார் பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக, அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களின் உரிமங்களும் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை டி.டி.எஃப். வாசன் போல பிற இளந்தலைமுறையினரும் ஆகிவிடக்கூடாது என்பதால் ஓட்டுநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய காரணம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6,266 கனஅடியில் இருந்து 3,423 கனஅடியாக குறைந்துள்ளது

சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6,266 கனஅடியில் இருந்து 3,423 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி முதல் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையிலிருந்து அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 5,583 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 6,266 கன அடியாக இருந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6,266 கனஅடியில் இருந்து 3,423 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 54.42 அடியிலிருந்து...

கட்டுரை

வாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்

வீட்டில் வாஸ்துபடி வேப்ப மரம், தென்னைமரம், மாமரம், பலாமரம், பாக்குமரம், கொன்றைமரம், நார்த்தை மரம், மாதுளை மரம், துளசிச்செடிகள் மற்றும் கொடி வகைகளில் மல்லிகை மற்றும் முல்லை, மணிபிளான்ட் கொடி வகைகளை தாராளமாக வளர்க்கலாம். இவை வீட்டிற்கு ஐஸ்வர்யம் தரும். இந்த செடிகளை தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் அமைத்தல் சிறந்தது.

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள் தொடர்கின்றன.. ஏக்கமும் தொடர்கின்றது.. நிர்வாணப்படுத்தி முழங்காலில் நிற்க வைத்து பிடரியில் சுட்ட காட்சியின் நிழல் படத்தைப் பார்த்த புலம்பெயர்ந்த சகோதரன் ஒருவன் துடி துடித்து அழத்தான் முடிந்தது.. என்ன செய்யப்போகிறோம்? இன்னும் நண்டுச் சட்டியில் நண்டுகள் இழுக்கும் கதையாய் வாழப் போகிறோமா? – இல்லை உலக அரங்கில் ஒன்று கூடித் திரளப்போகிறோமா? நம்மை நாம்தான் விடுவிக்க முடியும்.. நமது விடியல் நம் கையில் ஒன்றிணைவோம் நின்று வெல்வோம். -அகரப்பாவலன்-

காலையில் குளிர்ந்த நீர் குளியலால் ஏற்படும் நன்மைகள்

உடல் சுறுசுறுப்பாக இருக்கக் காலையில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதனால் மெட்டபாலிசம் தூண்டப்படுகிறது. மன அமைதி உண்டாகிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, டெஸ்டோஸ்டிரான் வெளியீட்டைத் தூண்டுவதன் மூலம் ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -