Wednesday, December 1, 2021

தமிழகம்

கோவை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 3 யானைகள் இறந்த சம்பவம் – ரெயில் என்ஜின் டிரைவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு

கோவையை அடுத்த நவக்கரை மாவுத்தம்பதி அருகே மரத்தோட்டம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் கோவை-பாலக்காடு ரெயில்வே தண்டவாளம் ஏ பிரிவு செல்கிறது. அந்த தண்டவாளத்தை நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் 3...

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்த விரைவில் புதிய குழு.

சென்னை அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 13வது ஊதிய ஒப்பந்தம் 2019 ஆகஸ்டில் முடிந்தது. அதற்கு முன், 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தி இருக்க வேண்டும். ஒப்பந்த பேச்சு முடிந்திருந்தால், ஊழியர்களுக்கு 2,000 முதல் 5,000 ரூபாய் வரை ஊதிய உயர்வு கிடைத்திருக்கும். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் ஒப்பந்த பேச்சு நடத்தப்படவில்லை. இடைக்கால நிவாரணமாக, 1,000 ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க ஆட்சி அமைத்தது. ஆறு மாதங்களாகியும் ஊதிய ஒப்பந்த பேச்சை துவங்காததால், தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றன. சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் போராட்டத்தை துவக்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவு நீங்கி, பஸ் போக்குவரத்து இயல்பு நிலைக்கு வந்துள்ளது. அதிகாரிகள் குழு இந்த நேரத்தில், ஊழியர்கள் ஸ்டிரைக் நடத்தினால் பிரச்னையாகும் என்பதால், ஊதிய ஒப்பந்த பேச்சை துவக்க அரசு...

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கிய பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு

பொதுப்பணித்துறையில் வேலூர் மாவட்ட தொழில் நுட்ப கல்வி பிரிவு செயல் பொறியாளராக பணியாற்றி வரும் ஷோபனா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 3ஆம் தேதி சோதனை நடத்தினர் அப்போது 2.27 கோடி ரூபாய் ரொக்கம் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் பினாமி பெயரில் சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் சோபனா திடீரென பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மண்டல பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு துணை கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பொதுப்பணித்துறை செயலாளர் தயானந்த கட்டாரியா பிறப்பித்துள்ளார்.

இலங்கை

சீனாவுக்கு எதிராக இலங்கை ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டிய காலம் வரும் – சமீர பெரேரா

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை படை ஆயுதப் போரில் ஈடுபட்டதுபோல வெகுவிரைவில் போர்ட் சிட்டி நிலத்தை மீட்பதற்காக சீனாவுக்கு எதிராக இலங்கை போர் தொடுக்கும் நிலைமை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையைச் சேர்ந்த பிரபல மனித உரிமை செயற்பாட்டாளரும், சிவில் அமைப்பைச் சேர்ந்தவருமான சமீர பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலை நினைவுகூறும் வகையில் கொழும்பு மருதானையிலுள்ள சி.எஸ்.ஆர் மண்டபத்தில் நேற்று இடம் பெற்ற கூட்டத்தில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: சர்வதேசத்தை நாம் எதிர்த்துக் கொள்ளக்கூடாது. கடந்த காலங்களாக சிவில் அமைப்புக்களை டாலர்களுக்கு அடிபணிகின்றவர்கள் என்றும், அரச சார்பற்ற நிறுவனங்களின் சர்வதேச சூழ்ச்சிகள் என்றும் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை கூட தெரிவித்திருந்தார். ஆனால் இன்று என்ன நடந்திருக்கின்றது? ஈஸ்டர் தாக்குதல் குறித்து உள்நாட்டு விசாரணையில் திருப்தி இல்லாததால் சர்வதேசத்தை நாடப்போவதாக அவரே அறிவித்திருக்கின்றார். இன்று போர்ச்சூழல் இல்லை. இருப்பினும் தீவிரவாத செயலினால் நூற்றுக்கணக்கானவர்கள் ஈஸ்டர் தாக்குதலில் பலியாகியிருக்கின்றனர்....

இலங்கையின் மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடம் இன்று திறப்பு

இலங்கை கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள அல்டெயார் (Altair) அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் முதலாம் கட்டம் இன்று திறக்கப்படவுள்ளது. 68 மாடிகளுடன் நிர்மாணிக்கப்படும் அல்டெயார் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் 230 மீட்டர் உயரம் கொண்டதாகும். இது தவிர 4 விதமான 407 அதிசொகுசு வீடுகளும் அவற்றில் அடங்குகின்றன.

சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில் உள்ள தமிழ் வர்த்தகருக்கு மிரட்டல்

சூரிச் மாநிலத்தின் மத்தியில் உள்ள தமிழ் வர்த்தகரின் சில்லறை கடையில் நாசிகள் என்று அடையாளமிடப்பட்டு வர்த்தகரை கடையினுள் வைத்து எரிப்பதாகவும் அவரது குழந்தைகள் தொடர்பிலும் அவரின் கடை கதவுகளில் வாசகங்கள் எழுதி மிரட்டல் விடப்பட்டிருந்தது. இதனை அடுத்து கடமையின் உரிமையாளர் இவ்விடயத்தை காவல்துறையினர் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுபோன்ற விடயங்களை சிங்களவர்கள் யாரும் செய்திருக்கலாம் என கருதுகின்றனர். சுவிஸில் வர்த்தக ரீதியில் தமிழர்கள் அதிகளவில் உயர்ந்த நிலையில் உள்ளமை யாவரும் அறிந்த விடயம். அதுமட்டுமல்லாமல் தொழில் ரீதியில் ஐரோப்பியாவில் தமிழர்கள் அதிக அளவில் பல துறை சார்ந்த தொழில்கள் செய்கின்றமை அங்குள்ள அரசுகளையே உயர்வாக பார்க்க செய்துள்ளது. இப்படியான நிலையில் இவ்வகையான மிரட்டல்கள் பல்வேறு கோனங்களில் பார்க்கப்படுகின்றது. உதாரணமாக ஐ.நா மனித உரிமைகள் கூட்டு தொடர்பில் இடம்பெற்று வரும் சூழ்நிலையில் அங்கு புலம்ப்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பங்களிப்புகள் அதிகம், அதில் ஈழத்தமிழர்களின் நோக்கத்தை திசை திருப்பும் நோக்கத்துடன் இச்சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என்று...

சினிமா

கலக்கும் “விக்ரம்’ பட கிளான்ஸ் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்து வரும் படம் விக்ரம். இந்தப் படத்தில் இருந்து கிளான்ஸ் விடியோ oசமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், செம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், விஜே மகேஸ்வரி, மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

அன்புமணிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம்

சென்னை பல சமூக, அரசியல் மாற்றங்களின் பங்களிப்பாக சினிமா இருந்திருக்கிறது. அப்படி ஒரு படைப்பாக வரவேற்கப்பட்டதே ஜெய்பீம் திரைப்படம் உள்ளது என அன்புமணிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார். கடந்த கால சம்பவங்களை படமாக்கும் பொது அதை படமாக பார்த்து விட்டு சமூக மாற்றத்துக்கு அது எவ்வகையில் பயனளிக்கும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தியேட்டர்களில் ஆய்வு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் திரையரங்குகளில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் திரையரங்குகளில் குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில், "கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பது தொடர்பான புகார் குறித்து அடிக்கடி சோதனை செய்து அபராதம் வசூலிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்மீகம்

திருக்கோயில்களில் இன்று முதல் இலையில் அன்னதானம் வழங்கப்படும்

அன்னதானம் வழங்கும் திருக்கோயில்களில் இன்று முதல் இலையில் உணவு வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திங்கள் முதல் வியாழக்கிழமை வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதானம் உணவுப்பொட்டலங்களாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மதுரை ஆதீனமாக ஹரிஹரர் தேசிகர் தேர்

மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 292வது மடாதிபதி அருணகிரிநாதர் மறைவை தொடர்ந்து 293வது மடாதிபதியாக ஹரிஹரர் தேசிகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதரால் இளவரசராக முடிசூட்டப்பட்டவர் ஹரிஹரர் தேசிகர். மதுரை ஆதீனமாக ஹரிஹரர் தேசிகருக்கு 10 நாளில் முடிசூட்டப்பட உள்ளதாக திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் கொரோனா கட்டுப்பாட்டு அறை – கவர்னர் கிரண்பேடி

புதுச்சேரி புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுவை அரசு, கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக கொரோனா போர் அறையின் மூலம் செயல் திட்டங்கள் தீட்டப்பட்டது. இந்த செயல் திட்டங்களை தற்போது காரைக்காலில் நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறை செயலர் அன்பரசு தலைமையிலான அதிகாரிகள் காரைக்காலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தின் விவாதத்தில் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் காரைக்கால் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், நோய் தொற்று குறைந்த பகுதியாகவும் கருத்தில் கொள்ளப்பட்டு உள்ளது. திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கொரோனா பரிசோதனையை 500-ல் இருந்து 1000 ஆக உயர்த்திடவும், அதனை தனியார் மருத்துவக்கல்லூரி ஒத்துழைப்புடன் செய்திடவும் முடிவு செய்யப்பட்டது. அங்கு 24 மணி நேரமும்...

வர்த்தகம்

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது

இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் ₹18,000 கோடிக்கு டாடா-விற்கு விற்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ₹70,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது. 68 ஆண்டுகளுக்கு முன் டாடா வால் உருவாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனம் வசமாகியது.

தேங்காய் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி – உற்பத்தியாளர்கள் கவலை

வேதாரண்யம் வேதாரண்யத்தில் தேங்காய் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம், வெள்ளிகிடங்கு, வண்டுவாஞ்சேரி, அண்ணாபேட்டை, கரியாப்பட்டினம், வடமழை, மணக்காடு, புஷ்பவனம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5,000 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இத்தொழிலை நம்பி சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் தற்போது இரண்டு ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு நன்றாக காய்த்து வருகிறது. இங்கு விளையும் தேங்காய்களில் வேதாரண்யம் மட்டுமின்றி பிற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தேங்காய் பருப்பு அதிக திராட்சையாக உள்ளதால் எண்ணை செக்குக்கு அதிகம் கொள்முதல் செய்யப்படுகிறது.இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது தேங்காய் விலை கடும் கிராக்கியாக இருந்தது. தற்போது அனைத்து பகுதிகளிலும் தேங்காய் அதிகம் உற்பத்தியாகி மார்க்கெட்டுக்கு வர துவங்கியுள்ளதால் கூடுதலாக விலை போகவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு தேங்காய் ரூ.15க்கு விற்று வந்த...

ஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு

ஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. நஷ்டத்துடன் இயங்கி வந்த நிலையில் ஜூலை 31-ம் தேதியுடன் எல்.ஜி நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துகிறது. எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியா

விவாதமின்றி 3 விவசாய சட்டங்கள் ரத்து – ப.சிதம்பரம் விமர்சனம்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய 3 விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளே இந்த விவசாய சட்டம் மூன்றும் ரத்து செய்யப்பட்டது.  இதனிடையே 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநிலங்களையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணமூல், சிவசேனை கட்சிகளைச் சோ்ந்த தலா இரண்டு எம்.பி.க்களும், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி.யும் கூட்டத்தொடரின் எஞ்சிய அமா்வுகளில் கலந்துகொள்ளக் கூடாது என இடைநீக்கம் செய்து அவை துணைத் தலைவர் உத்தரவிட்டார்.  இந்நிலையில் விவாதமின்றி 3 விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர்...

உரிமைக்காக எவ்வாறு போராடுவது என விவசாயிகள் கற்றுக்கொடுத்துள்ளனர் – கெஜ்ரிவால்

டெல்லி புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி போராட்டத்தை தொடங்கினர். பல மாதங்கள் நீடித்த இந்த போராட்டத்தின் விளைவாக புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக கடந்த 19-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கிடையில், டெல்லி எல்லையில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடங்கி இன்றுடன் (நவ.26) ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், உரிமைக்காக அமைதியான முறையில் எவ்வாறு போராடுவது என்பது குறித்து விவசாயிகள் கற்றுக்கொடுத்துள்ளனர் என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விவசாயிகள் போராட்டம் இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம் வெப்பம்-குளிர் மற்றும் மழை-புயலுடன் நிறைய சதிகளையும் சந்தித்துள்ளது. உரிமைக்கா அமைதியான முறையில் எவ்வாறு போராடுவது என்பதை நாட்டு விவசாயிகள் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளனர். அந்த தைரியத்திற்கு நான் தலைவணங்குகிறேன். விவசாய சகோதரர்களின் உத்வேகம், தியாகத்திற்கு...

இந்தியாவில் ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய குடும்பநல சர்வே

இந்தியாவில் ஆண்கள் எண்ணிக்கையைவிட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக 5-வது தேசிய குடும்ப நல சர்வே (என்.எப்.ஹெச்.எஸ்) தெரிவித்துள்ளது. கடந்த 1992-ம் ஆண்டு சர்வே தொடங்கப்பட்டதிலிருந்து முதல்முறையாக ஆண்கள் எண்ணிக்கைவிட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது 1,000 ஆண்களுக்கு, 1,020 பெண்கள் உள்ளனர். கடைசியாக 2015-16ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 1,000 ஆண்களுக்கு 991 பெண்கள் என்ற ரீதியில் இருந்தனர். இந்தியாவில் மக்கள் தொகை எவ்வாறு இருக்கிறது, எந்த வீதத்தில் இருக்கிறது என்பதை பரவலாக அறிந்து கொள்ள தேசிய குடும்ப நல சர்வே பயன்படுகிறது. நாடுமுழுவதும் 707 மாவட்டங்களில் இருந்து 6.1 லட்சம் வீடுகளில் இருந்துமாதிரிகள் திரட்டப்பட்டன. ஆனால், இந்த சர்வே பரந்த அளவில் நடத்தப்படாமல் மாவட்ட அளவில் நடத்தப்பட்டும். ஆனால், எதிர்காலசூழலை அறிய காரணியாக இருக்கும். கடந்த 5 ஆண்டுகளில் அதாவது கடந்த 2015-16ம் ஆண்டில் பாலின விகிதத்தில் ஆண் குழந்தைகள் பிறப்பு என்பது ஆயிரத்தில் 919 என்ற விகித்திலிருந்து 929 ஆக அதிகரித்துள்ளது. பிறக்கும் குழந்தைகளில்...

உலகம்

டெல்டாவை “ஓவர் டேக்” செய்த ஓமிக்ரான் – வல்லுனர்கள் எச்சரிக்கை.

ஓமிக்ரான் கொரோனா மீதான அச்சம் உலகம் முழுக்க நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதிகாரபூர்வ தகவல்களின்படி உலகம் முழுக்க தற்போது 110க்கும் அதிகமான நபர்களுக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இது மொத்தம் 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளது. டெல்டாவை விட இது அதிக முறை உருமாற்றம் அடைந்துள்ளது. அதிக ஆபத்து கொண்டதாக உள்ளது. இதனால் ஓமிக்ரான் கொரோனா வைரஸை கவலை அளிக்க கூடிய வைரஸ் வகையாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. உருமாற்றம் அடைந்த .1.1.529 ஓமிக்ரான் கொரோனா ஏன் ஆபத்தானது, அதை பற்றி நமக்கு என்னென்ன விவரங்கள் தெரியும் என்று தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருத்துவர் பிரியா சம்பத்குமார் விளக்கி உள்ளார். 1. இந்த ஓமிக்ரான் கொரோனா முதலில் கண்டறியப்பட்டது தென்னாப்பிரிக்காவில். போட்ஸ்வானாவில் முதலில் கண்டறியப்பட்டது. நவம்பர் 9ம் தேதி கண்டறியப்பட்டது. சரியாக ஓமிக்ரான் கண்டறியப்பட்டு...

ஜெர்மனியை புரட்டிப் போடும் கொரோனா 4-வது அலை

கொரோனா 4-வது அலை ஜெர்மனியை புரட்டிப் போட்டு வரும் நிலையில் அங்கு தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. அதேநேரம் ஒருநாள் கொரோனா பாதிப்பும் 75 ஆயிரத்தை கடந்து புது உச்சம் தொட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 351 பேர் தொற்றுக்கு பலியான நிலையில் 75 ஆயிரத்து 961 பேர் தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த காபந்து அரசின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் மணிப்பூர் முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஈழத் தமிழர்கள் ஆலோசனை

மணிப்பூர் முன்னாள் முதலமைச்சர் ராதாபினோத் கொய்ஜாம் தலைமையிலான மனிதவுரிமை குழுவுடன் சமதா கட்சி மற்றும் ஈழத்தமிழர் நட்புறவு மையம் ஆலோசனை நடத்தியது. ஈழத் தமிழர்கள் நிலையை எவ்வாறு சீரமைப்பது என்பது குறித்தும் இந்தியா முழுவதும் உள்ள, மனித உரிமை மீறல்களை எதிர்க்கின்ற அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டன. நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மணிப்பூர் மாநில முன்னாள் முதலமைச்சர் ராதாபினோத் கொய்ஜாம், சமதா கட்சியின் அகில இந்திய முதன்மை பொதுச்செயலாளர் என்.ஏ.கோன், ஈழத் தமிழர் நட்புறவு மைய பிரதிநிதிகள் பேராசிரியர் ராமு.மணிவண்ணன் மற்றும் பொன்னம்பலம், கே.டி.சிங், இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ், கோவா (ஓய்வு), லெப்டினென்ட் ஜெனரல் ஹிமாலை கொன்சம் (ஓய்வு) மற்றும் பப்லு லோய்டோங்பாம், எக்சிகுடிவ் டைரக்டர், ஹியூமன் ரைட்ஸ் அலெர்ட் - மணிப்பூர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளையாட்டு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள்

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. வங்க தேசம், அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து மற்றும் இலங்கை ஆகிய எட்டு அணிகள் ‘ரவுண்ட் 1’ சுற்றில் பங்கேற்கின்றன.

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக ₹3.98 கோடி – முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

பாராலிம்பிக் போட்டிகள், ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டிகள் மற்றும் பல்வேறு சதுரங்க போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் 15 பேருக்கு ஊக்கத்தொகையா ரூ.3.98 கோடிக்கான காசோலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் விளையாட்டுத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சுக்கு தேர்வு

ஐபிஎல் 2021 டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அபுதாபியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

பொது

ஷார்ட்ஸ் அணிந்து சென்றதால் SBI வங்கியில் நுழைய வாடிக்கையாளருக்கு அனுமதி மறுப்பு

ஷார்ட்ஸ் அணிந்து சென்றதால் வங்கியில் நுழைய வாடிக்கையாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஷார்ட்ஸ் அணிந்து வந்திருந்ததால், வங்கியில் நுழைய வாடிக்கையாளருக்கு வங்கிக் கிளை அனுமதி மறுத்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியிருக்கிறது பள்ளி, கல்லூரிகள், கோயில்க்ச்ளில், அலுவலகங்களில் ஆடைக் கட்டுப்பாடு குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பொதுமக்கள் வந்து செல்லும் வங்கிக் கிளைகளில் பொதுவாக ஆடைக் கட்டுப்பாடு குறித்து இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஆனால் வங்கிக்கு சென்றபோது ஆடைக் கட்டுப்பாடு இருப்பதாக கூறி வேறு ஆடை அணிந்து வருமாறு வங்கிக் கிளை ஊழியர் ஒருவர் தன்னை வற்புறுத்தியதாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் தெரிவித்திருக்கிறார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் சென்ற ஆஷிஷ் என்ற வாடிக்கையாளர், தான் ஷார்ட்ஸ் அணிந்து சென்றதாகவும், அப்போது வாடிக்கையாளர்கள் இப்படி அரைக்கால் சட்டை அணிந்து வருவது நாகரீகம் கிடையாது என்பதால் முழுக்கால் சட்டை அணிந்து வங்கிக்கு வருமாறு என்னிடம் வங்கி...

கோவையில் தொழில் தொடங்க முன் வரும் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடனுதவி

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை, சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. அந்த வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரைதளத்தில் செயல்படும் லைப் ரே பவுண்டேசன் தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மகளிர் குழுவினர் சுயதொழில் செய்வதற்காக 50 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லா கடனுதவி வழங்குகிறது. திருப்பி செலுத்த ஒன்றரை ஆண்டு கால அவகாசம் தருகின்றனர். இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஜில் ரஹ்மான் கூறியாதாவது: இந்நிறுவனம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி துவங்கிய கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், 73 பேர் பயன் பெற்றுள்ளனர். 85 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் 132 பேருக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மருத்துவ கருவிகள் வாங்கவும் உதவி அளிக்கப்படுகிறது என்றார். இது குறித்து நிறுவன இயக்குனர் ஐஸ்வர்யா தேவ் கூறுகையில்: மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், மகளிர் குழுவினருக்குக் கடன் அளிப்பது மட்டுமின்றி, மெழுகுவர்த்தி செய்தல், பொம்மை...

கேரளாவில் மேலும் 9,246 பேருக்கு கொரோனா தொற்று.

திருவனந்தபுரம் கேரள மாநில சுகாதாரத்துறை இன்றைய கொரோனா வைரஸ் தொற்று குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கேரளாவில் நேற்று புதிதாக மேலும் 9,246 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,952 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 96 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 95,828 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 26,667 பேர் உயிரிழந்த நிலையில் 47,06,856 பேர் குணமடைந்துள்ளனர்.

கட்டுரை

பனை மரம் தமிழ்ச் சமூகத்தின் உயிர் சாட்சி

தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமைக்குரியது பனை. ஆனால், பனை தொடர்பான மக்களின் வழக்காறு என்பது பெரும்பாலும் எதிர்மறையாகவே இருந்துவந்திருக் கிறது. ‘பனை மரத்துல பாதி வளர்ந்திருக்கான், ஆனால் ஒண்ணுமே தெரியலை’, ‘பனை மரத்துக்குக் கீழ நின்னு பாலைக் குடிச்சாலும், ஊரு தப்பாத்தான் பேசும்’ என்று பனை மற்றும் பனை சார்ந்த விஷயங்கள் ஒரு நபரை அல்லது ஒரு விஷயத்தை இழிவுசெய்யவே பயன்பட்டு வருகிறது.

கொழும்பு துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை வெளியேற்றுகிறதா இலங்கை?

ஈரானின் சபாஹர் துறைமுக ரயில் திட்டத்தில் இருந்து இந்தியா விலக்கப்பட்டதை போல கொழும்பு துறைமுக திட்டத்திலும் இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது. ஈரானின் சபாஹர் துறைமுகத்தை இந்தியாவும் , அதற்கு அருகே பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை சீனாவும் தங்கள் வசமாக்கின. இதன் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் வழிப்பாதையை இருநாடுகளும் தங்களுக்கு சாதகமாக மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டன. ஆனால் காலப்போக்கில் ஈரானும் சீனாவும் நெருக்கமான உறவை மேற்கொள்ள தொடங்கின. இன்னொருபக்கம் இந்தியாவோ, அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுடனான நட்புறவில் தேக்க நிலையை உருவாக்கிக் கொண்டது. இதனால் சபாஹர் துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை விலக்குவது என ஈரான் முடிவு செய்திருக்கிறது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனைய திட்டத்தை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயக்படுத்துவதற்கு கடும் நெருக்கடி எழுந்துள்ளது. இதனால் இந்த திட்டத்தில்...

பொருளாதார மந்த நிலையும், திணறும் ஜி.எஸ்.டி பகிர்ந்தளிப்பு நிதிப் பற்றாக்குறையும் – திணறும் மத்திய அரசு

இந்தியா முழுக்க ஒரு வித பொருளாதார மந்த நிலை நிலவிக் கொண்டு இருப்பதை அனைத்து தரப்பினரும் உணருகிறார்கள். இந்த பொருளாதார மந்த நிலையினால் வியாபாரிகளுக்கு வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே மத்திய அரசுக்கு ஜி.எ.ஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் நேரடி வரிகள் மூலம் வர வேண்டிய வரி வருவாய் பெரிய அளவில் சரிந்துள்ளது.
- Advertisement -