இபிஎஸ் வசம் சாவியை ஒப்படைத்த உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு
ஓபிஎஸ் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன், ஒரு கட்சி அலுவலகத்தை மூடி சீல் வைப்பது என்பது ஜனநாயக ரீதியாக ஏற்கத்தக்கதல்ல.
குற்றவியல் நடைமுறைச்சட்டம் 145 மற்றும் 146 ன்படி தமிழக அரசு அதிமுக அலுவலகத்தை சீல் வைத்தது தவறானது.
எனவே, இபிஎஸ் வசம் அலுவலக சாவியை ஒப்படைத்த சென்னை உயர் நீதீமன்ற தனி நீதிபதியின் உத்தரவு சரியானதே
என தீர்ப்பளித்துள்ளனர்.