Thursday, April 18, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஆன்மீகம்புத்த கயா

புத்த கயா

புத்தகயை (புத்த கயா அல்லது உள்ளூர் உச்சரிப்பின்படி போத்கயா. இந்திய மாநிலமான பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கௌதம புத்தர் இங்குள்ள அரசமரத்தடியில் (போதி மரம்) ஞானம் பெற்ற இடம் என்பதால், உலகம் முழுவதுமுள்ள பெளத்தர்களுக்கு புத்தகயா புனிதத் தலமாகத் திகழ்கிறது. முற்காலத்தில் போதிமண்டா எனப்பட்ட இவ்விடத்தில் பிக்குகள் தங்கும் பெரிய விகாரம் ஒன்று இருந்தது. புத்த காயாவில் உள்ள முதன்மையான துறவிமடம் போதிமண்டா விகாரையாகும். இது இப்போது மகாபோதி கோயில் என அழைக்கப்படுகிறது. கௌதம புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய நான்கு யாத்திரைத் தலங்களில் புத்த கயாவே முதன்மையானதாகப் புத்த மதத்தினர் கருதுகின்றனர். மற்றவைகள் குசிநகர், லும்பினி, சாரநாத், கபிலவஸ்து, புத்த கயா, சாரநாத் மற்றும் சாஞ்சி ஆகும். 2002 ஆம் ஆண்டில் மகாபோதி கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments