Thursday, April 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுகொரோனா செய்திகள் 23-04-2020

கொரோனா செய்திகள் 23-04-2020

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து மரணம் அடைந்த மருத்துவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இராமநாதபுரத்தில் மெழுகுவத்தி ஏற்றி சக மருத்துவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் இன்று 54 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1683 அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 21,393 ஆக உயர்ந்துள்ளது. இதில் 16,454 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 681 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். மேலும், 4,258 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

பிரதமர் மோடி, கடந்த மாதம் 20-ம் தேதியும் இந்த மாதம் 11-ம் தேதியும் முதலமைச்சர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்நிலையில், வரும் 27-ம் தேதி மீண்டும் முதலமைச்சர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களில் இன்று முதல் ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் இடம், பெயர், தொலைப்பேசி எண்ணை பெற்றுக்கொண்டு இலவச உணவு தர உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களிடம் ஒரே நாளில் 1.22 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ.1.46 கோடியிலிருந்து ரூ.2.68 கோடியாக உயர்ந்துள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 2,68,537 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2,39,770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல உயிரியல் பூங்காவில் 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு – வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,935ஆக உயர்வு. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 27 பேர் உயிரிழப்பு – 344 பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய அரசு சார்பில் குடும்பத்தினருக்கு ₨7,500 வழங்க வேண்டும்: சோனியா.

சமூக இடைவெளி இல்லாததால் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூடப்பட்டது. விவசாயிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை.

நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில்தான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை நினைவுப்படுத்தும் வகையில் சிறப்பு அஞ்சல் உறையை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,36,989 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,84,186 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேநேரம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,17,619 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடக அரசு சில பணிகளுக்கு மட்டும் இன்று முதல் அனுமதி அளித்துள்ளது. ஐ.டி நிறுவனங்கள், கட்டுமானப் பணிகள் மற்றும் சில உற்பத்தி நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்க வேண்டும் என கூறியுள்ளது. இதைத்தவிர சுயதொழில்கள் செய்யும் எலக்ட்ரீசியன், பிளம்பர்ஸ், மெக்கானிக்ஸ் போன்றவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவால் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். ஊரடங்கால் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைக்காததால் காய்கறிகள் அனைத்தும் கெட்டுப்போய்விட்டன என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவை கண்டறிய பிசிஆர் டெஸ்ட் அவசியம் என்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது. கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம்.

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 437 பேர் வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 25,000-ஐ கடந்துள்ளது. இத்தாலியில் இதுவரை 1,87,000-க்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும், 54,000-க்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஜெர்மன் பயோடெக் நிறுவனமான பயோ என் டெக் (BioNTech) கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் சோதித்துப் பார்க்க ஜெர்மன் அரசு அனுமதி அளித்துள்ளது. BNT 162 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை பயோ என் டெக்கும், உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான ஃபைசரும் (Pfizer) இணைந்து உருவாக்கியுள்ளன. வெக்டர் மற்றும் ஆர்என்ஏ அடிப்படையில் தலா 2 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 18க்கும் 55 வயதுக்கும் இடையிலான நல்ல திடகாத்திரமான 200 பேரிடம் முதலில் இவை சோதித்துப் பார்க்கப்படும்.

கொரோனா நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ₹7,500  வழங்க வேண்டும்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா பேச்சு.

கொரோனாவுக்கு எதிரான பணியில் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் தரப்படும் என முதல்வர் அறிவித்ததற்கு மருத்துவர்கள் நன்றி.

அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதற்கான நேரம் முடிந்ததால் அண்ணா சாலையின் ஒரு பகுதியில் வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு சாலை மூடல். விதிகளை மீறி சாலையில் பயணிப்போரை கண்காணித்து நடவடிக்கை.

Republic தொலைக்காட்சி ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமியின் கார் மீது 2 மர்ம நபர்கள் தாக்குதல். மும்பையில் நேற்று நள்ளிரவு அர்னாப் மற்றும் அவரின் மனைவி காரில் பயணித்த போது தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக தகவல். அர்னாப் கோஸ்வாமி, அவரின் மனைவி மீதான தாக்குதல் தொடர்பாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தது காவல்துறை.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை குடிக்கலாம். இது கொரோனாவுக்கான சிகிச்சை அல்ல, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறையே – தமிழக அரசு.

மொபைல் ரீசார்ஜ் கடைகள் இயங்கலாம். மின்விசிறி ரிப்பேர் கடைகள் இயங்கவும் அனுமதி. மாணவர்களுக்கான புத்தக கடைகள் நகர்ப்புறப் பகுதிகளிலும் தொடர்ந்து இயங்கலாம் – மத்திய உள்துறை  அமைச்சகம்.

24 மணி நேரத்தில் இந்தியாவில் 1409 பேருக்கு கொரோனா என மத்திய சுகாதார துறை தகவல். கடந்த 28 நாளில் 12 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. 23 மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை – சுகாதாரத் துறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments