Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாமே 12 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட தடங்களில் குறைந்த அளவில் பயணிகள் ரயில் இயக்கம்: ரயில்வே அறிவிப்பு

மே 12 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட தடங்களில் குறைந்த அளவில் பயணிகள் ரயில் இயக்கம்: ரயில்வே அறிவிப்பு

மே 12ம் தேதி முதல் மெதுவாகக் குறைந்த அளவில், தேர்ந்தெடுக்கப்பட்ட தடங்களில் பயணிகள் ரயிலை இயக்க இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது. 15 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்கள் சிறப்பு ரயில்கள்; இது புதுடெல்லி நிலையத்திலிருந்து திப்ருகார், அகர்தாலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, அகமதாபாத், புவனேஷ்வர், செகந்தராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மத்கவான், மும்பை செண்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்முதாவி ஆகிய நகரங்களை இணைக்கும் ரயில்களாக இருக்கும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

அனைத்து பயணிகள் ரயிலும் மார்ச் 25ம் தேதி லாக் டவுன் காரணமாக இயக்கம் நிறுத்தப்பட்டது.

இந்த 15 ரயில்கள் சேவை தொடங்கிய பிறகு புதிய தடங்களில் மேலும் சில சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கத் திட்டமிட்டுள்ளது. அதாவது கோவிட்19 வைரஸ் காய்ச்சல் நோயாளிகளுக்காக 20,000 ரயில் பெட்டிகளை ஒதுக்கிய பிறகும், புலம்பெயர்ந்தோர் சொந்த மாநிலங்கள் போய்ச் சேர தேவைப்படும் 300 ரயில்களுக்கான பெட்டிகள் போக மீதி ரயில் பெட்டிகள் இருப்பதை வைத்து புதிய தடங்களில் ரயில்கள் இயக்கப்படலாம் என்று ரயில்வே தெரிவித்துள்ளது

இந்த ரயில்களுக்கான ரிசர்வேஷன் டிக்கெட்டுகளுக்கான புக்கிங் மே 11 மாலை 4 மணி முதல் தொடங்குகிறது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும். ரயில் நிலையங்களில் டிக்கெட் புக்கிங் கவுண்டர்கள் செயல்படாது. பிளாட்பார்ம் டிக்கெட் கூட கொடுக்கப்பட மாட்டாது.

உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் உள்ள பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம், இவர்களுக்கு ஸ்க்ரீனிங் டெஸ்ட்டும் உண்டு, நோய் அறிகுறிகள் இல்லாதவர்களே ரயில்களில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments