Wednesday, April 24, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுகந்துவட்டி கூடங்களாக மாறிய கூட்டுறவு வங்கிகள்

கந்துவட்டி கூடங்களாக மாறிய கூட்டுறவு வங்கிகள்

கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கோட்டூர் கிளை மூலமாக, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா பேரிடர் காலத்தில், மக்களை வெளியில் செல்லக்கூடாது என அரசு வீட்டில் இருக்க அறிவுறுத்தியுள்ளது. வேலைக்கு செல்லாததினால் மக்களின் அடிப்படை வாழ்வாராதரம் நொறுக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கியவர்கள், தவணை தொகையை கட்டுவதற்கு ஆகஸ்ட் மாதம் வரை தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் கொடுத்த கோவை மத்திய கூட்டுறவு வங்கி, அரசின் அறிவிப்பை சிறிதும் மதிக்காமல், கடன் பெற்றவர்களை தொந்தரவு செய்து வசூல் செய்கிறார்கள். அதிலும் கடந்த இரண்டு மாதம் கட்டவில்லை என்பதால், வட்டிக்கு வட்டி போட்டு கந்து வட்டி வசூல் செய்திருக்கிறார்கள்.

மாதம் 30 ஆயிரம் கட்டவேண்டிய ஓரு மகளிர் சுயஉதவி குழுவுக்கு, கட்டிய 30,000 – ல், வட்டி 17,400 என்றும், அசலில் கழிக்கப்பட்டது 12,600 என்றும் ரசீது கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி அத்துமீறி கந்துவட்டி வசூலிப்பது, கஷ்டப்பட்டு வேலை செய்து அன்றாட வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சுவதாகதா? இதை தனி நபர் ஒருவர் செய்திருந்தால் நிச்சயமாக அவர் கந்துவட்டி சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார். அரசே கந்துவட்டி கூடம் நடத்தினால்?

மக்கள் வேலைக்கு போகமாட்டோம் என்று சொல்லவில்லை. அரசுதான் மக்களை எங்கும் செல்லக்கூடாது என்று வீட்டில் உட்கார வைத்துள்ளது. எனவே மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். அதிகமாக வசூலித்த பணத்தை திருப்பியளிக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தளர்வு காலத்துக்கும் வட்டிக்கு வட்டி வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில், மக்கள் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டுவதை தவிர வேறு வழியில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments