ஆகஸ்ட் 11 முதல் கொரோனா தொற்று காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமார் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 70. இன்று மாலை 6.58 மணிக்கு அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் கட்சி கொடி அரை கம்பத்தில் இறக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வசந்தகுமார் உடலுக்கு தலைவர்கள், பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தவுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பலியான இரண்டாவது அரசியல் பிரமுகர் வசந்தகுமார் எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவுக்கு பலியானார்.