புதுச்சேரி
திருநள்ளாறு கோவிலில் ஆன்லைன் முன்பதிவு தரிசன முறையை ரத்து செய்வது குறித்து ஆலோசனை நடத்துவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.
கடந்தாண்டு சனிப்பெயர்ச்சியின் போது 1.5 லட்சம் பேர் தரிசித்த நிலையில் இந்தாண்டு 12,000 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்துள்ளனர் என கூறினார். வருவாய் குறைந்தாலும், பக்தர்கள் சிரமத்தை கருத்தில் கொண்டும் ஆன்லைன் முன்பதிவை ரத்து செய்ய ஆலோசனை நடத்த உள்ளதாக கூறினார்