Monday, September 27, 2021
Home தமிழகம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு

அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மகேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுதித்திருந்தார். வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் இருவேறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளது, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் மீது வழக்குப் பதிவுசெய்து ஆளுநரிடம் உரிய ஒப்புதல் பெற்று விசாரிக்க வேண்டும்’ என நீதிபதி சத்தியா நாராயணன் தீர்ப்பளித்துள்ளார். அதேபோல், இந்த வழக்கில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிய முகாந்திரம் இல்லை, என நீதிபதி ஹேமலதா தீர்ப்பளித்துள்ளார். ஒரே வழக்கில் நீதிபதிகளின் இருவேறுபட்ட தீர்ப்பால், இந்த வழக்கு தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது_

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

டி. என். பி. எஸ். சி தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய முறைப்படி அனைத்து தேர்வுகளுக்கு முன்பாக தமிழ் மொழித்தாள் தேர்வு நடத்தப்படும்....

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வானது ஏப்ரல் 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்காலிக உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ.12,750ல் இருந்து ரூ.13,250ஆக உயர்த்தப்படுகிறது.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சுக்கு தேர்வு

ஐபிஎல் 2021 டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அபுதாபியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

வீட்டிற்குள் புகுந்த முதலை – அலறி அடித்து ஓடிய மக்கள்

சென்னை பெருங்களத்தூர் அடுத்த சதானந்தபுரத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் முதலை வந்ததால் மக்கள் அலறி அடித்து ஓடினர். விஜயகுமார் என்பவர் வீட்டில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது முதலை இருப்பதாக அலறி அடித்து...

Recent Comments