Sunday, May 22, 2022
Home தமிழகம் தமிழகத்தில் இன்று (ஜூன் 11) 1,875 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 38,716.

தமிழகத்தில் இன்று (ஜூன் 11) 1,875 பேருக்கு கொரோனா – மொத்த பாதிப்பு 38,716.

சென்னை

தமிழகத்தில் இன்று (ஜூன் 11) ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,716 ஆகவும், பலி எண்ணிக்கை 349 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் இன்று மேலும் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 38 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 38,716 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 77 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 16,829 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 6,55,675 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 19 பேரும், செங்கல்பட்டில் 2 பேரும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா ஒருவரும் என மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய உயிரிழப்புகளில் 21 பேர் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 20,705 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 17,659 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,999 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 32,422 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 4,295 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் – பிரதமர் மோடி

ராஜஸ்தான் ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான் என்று ராஜஸ்தானில் நடைபெற்று வரும் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஹிந்தி திணிப்பு பற்றி சர்ச்சை நிலவி வரும் நிலையில் மாநில...

பெகாசஸ் விசாரணை குழுவுக்கு அவகாசம் நீட்டிப்பு

டெல்லி பெகாசஸ் விசாரணை குழுவுக்கு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் மாதம் 20-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணி மாநகராட்சி பணிக்கு ஒப்பந்தங்கள் ஒதுக்கியத்தில்...

ஷவர்மா ஆபத்தான உணவா?

ஷவர்மாவை சூடாக்கும்போது வெளியில் உள்ள பகுதி மட்டுமே வேகிறது. இறைச்சி போதிய அளவில் வேகாமல் உள்ளதுதான் பிரச்சனை. கோழிக் கறியைக் குளிர்பதனப் பெட்டியில் வைக்காமல் வெளியிலேயே வைத்திருப்பதால் அவை கெட்டுப் போகின்றன. வெளிநாட்டு...

Recent Comments