Tuesday, August 9, 2022

தமிழகம்

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் செஸ் விளையாடியுள்ளனர் – அமைச்சர் பெரியகருப்பன்

தஞ்சாவூரில் நேற்று (ஜூலை 26) மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், தமிழர்களுக்கு செஸ் விளையாட்டு ஒன்றும் புதிதானது அல்ல. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் செஸ் விளையாடியுள்ளனர். கீழடி...

அதிமுக விலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்

கழக கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராகவும், தி.மு.கவுக்கு ஆதரவாகவும், தான் தலைமை ஏற்ற கட்சியின் பொதுக்குழுவை தடைசெய்ய போலீசில் புகார் செய்தும், கழகத்திற்கு எதிராக வழக்கு போட்ட பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை விதி 35 படி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். அதேபோல் எம்.எல்.ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோரும் நீக்கப் படுகிறார்கள் என்ற தீர்மானத்தை நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

தற்காலிக ஆசிரியர் பணிக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பம் – பள்ளிக் கல்வித்துறை

தமிழ்நாட்டில் 2022-2023ம் கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடைநிலை, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டு்ள்ளது. இந்நிலையில், தற்காலிக ஆசிரியர் பணிக்கு மொத்தம் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒரு நபரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்ததால் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இலங்கை

இலங்கை அதிபர் மாளிகையில் குவிந்த குப்பைகள்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஜூலை 9ம் தேதி அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதிபர் மாளிகையில் புகுந்த போராட்டக்காரர்கள் உபயோகித்தது போக மீதமுள்ள பொருட்கள், குப்பைகள், ஆகியவை மலைபோல் திரண்டன. அவற்றை போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இளைஞர்கள், பெண்கள் ஒன்றாக சேர்ந்து, திரட்டி மூட்டைகளாக கட்டி வைத்துள்ளனர்.

பிரதமர் மாளிகை வேண்டாம் – ரணில் விக்கிரமசிங்கே அறிவிப்பு

இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே வீட்டிலிருந்தே பணி செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். அந்நாடு பொருளாதார சிக்கலில் உள்ள நிலையில், அவர், பிரதமர்களுக்கான அலறி மாளிகை எனக்கு வேண்டாம், அரசின் செலவினங்களை குறைக்கும் பொறுப்பு எனக்கும் உள்ளது. இந்த நடவடிக்கையை அமைச்சர்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவிடம் இலங்கை அவசரகால மருத்துவ உதவிக்கு கோரிக்கை

இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு, இலங்கை அரசு அவசரகால மருத்துவ உதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் மருந்து தேவையில் 85% இறக்குமதி மூலம் பெறப்பட்டு வந்த நிலையில், அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால், மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகியிருக்கிறது. இதனால், அவசரத் தேவையுள்ள மருந்துகளின் பட்டியலை இந்தியாவுக்கு அனுப்பி உதவி கேட்டிருக்கிறது.

சினிமா

தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்ய கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி – உயர்நீதிமன்றம்

சென்னை தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்ய கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததால் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும். எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை ரத்து செய்ய நீதிபதி சந்திரசேகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் பெயரில் சாலை – அவர் மனைவி வேண்டுகோள்

மறைந்த திரைப்பட நடிகர் விவேக் அவர்களின் மனைவி அருட்செல்வி இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென்று கோரிக்கை கடிதம் அளித்தார்.

கரூர் மாநகராட்சியில் “பீஸ்ட்” திரைப்படம் வெளியாகாது

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்க் காமெடி கலந்த ஆக்சன் படம் “பீஸ்ட்”. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்து காத்துள்ளனர். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் நாளை (ஏப்ரல் 13-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் உலக அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தியேட்டர்களில் வெளியாகாது என்று மாநகராட்சி திரையங்க உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளனர். திரையங்க உரிமையாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் ஒப்பந்த விதிமுறைகள் தொடர்பான பிரச்னையின் காரணமாக இந்த முடிவை கரூர் திரையரங்க உரிமையாளர்கள் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் மாநகராட்சிகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகாது என்ற அறிவிப்பு விஜய் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஆன்மீகம்

ஆன்மீகவாதி கருத்து சொல்லக்கூடாதா? – மதுரை ஆதீனம்

குருபூஜையன்று தருமபுரம் ஆதீனத்தைப் பல்லக்கில் பக்தர்கள் தூக்கிச் செல்வார்கள். ஆதீனங்கள் பல்லக்கில் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமென்பதால் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆன்மிகமும் அரசியலும் ஒன்றுதான். மடத்துப் பிரச்சினையை மத பிரச்சனையாக ஆக்கியது யார்? அரசியல்வாதி என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆன்மீகவாதி பேசக்கூடாதா? என, மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

திருக்கோயில்களில் இன்று முதல் இலையில் அன்னதானம் வழங்கப்படும்

அன்னதானம் வழங்கும் திருக்கோயில்களில் இன்று முதல் இலையில் உணவு வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திங்கள் முதல் வியாழக்கிழமை வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதானம் உணவுப்பொட்டலங்களாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மதுரை ஆதீனமாக ஹரிஹரர் தேசிகர் தேர்

மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 292வது மடாதிபதி அருணகிரிநாதர் மறைவை தொடர்ந்து 293வது மடாதிபதியாக ஹரிஹரர் தேசிகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதரால் இளவரசராக முடிசூட்டப்பட்டவர் ஹரிஹரர் தேசிகர். மதுரை ஆதீனமாக ஹரிஹரர் தேசிகருக்கு 10 நாளில் முடிசூட்டப்பட உள்ளதாக திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

வர்த்தகம்

அதிக வருவாய் ஈட்டிய 500 நிறுவனங்கள் பட்டியல் – 98-வது இடத்தை பிடித்தது எல்.ஐ.சி.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 19 ஆண்டுகளாக இப்பட்டியலில் இருக்கிறது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை அவற்றின் மொத்த வருவாய் அடிப்படையில் ‘பார்ச்சுன்’ என்ற அமைப்பு ஆண்டுதோறும் தரவரிசைப்படுத்தி வருகிறது. அதுபோல், கடந்த மார்ச் 31-ந் தேதியுடன் முடிவடைந்த நிதிஆண்டில், உலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய முதல் 500 நிறுவனங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில், கடந்த நிதிஆண்டில் முதல்முறையாக பங்குச்சந்தையில் நுழைந்த எல்.ஐ.சி. நிறுவனம், 98-வது இடத்தை பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 19 ஆண்டுகளாக இப்பட்டியலில் இருக்கிறது. இந்த ஆண்டு 51 இடங்கள் முன்னேறி, 104-வது இடத்தை பிடித்துள்ளது. பட்டியலில் 9 இந்திய நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 5 பொதுத்துறை நிறுவனங்களும் அடங்கும். இந்திய எண்ணெய் கழகம் (142-வது இடம்), ஓ.என்.ஜி.சி. (190-வது இடம்), பாரத ஸ்டேட் வங்கி (236-வது இடம்), பாரத் பெட்ரோலியம் (295-வது இடம்) ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. தனியார் துறையில் டாடா குழுமத்தின் 2...

விவோ நிறுவனம் ரூ.62,476 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிப்பு.

விவோ நிறுவனம் ரூ.62,476 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிப்பு. இந்தியாவில் சம்பாதித்த பணத்தை வரி செலுத்தாமல் சீனாவுக்கு அனுப்பியது அம்பலம். இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடி சம்பாதித்த் விவோ 50% வரி செலுத்தாமல் அனுப்பியுள்ளது. நேற்று விவோவை சார்ந்த 23 நிறுவனங்களுக்கு சொந்தமான 48 இடங்களில் சோதனை நடைபெற்றது. வீவோ இந்தியா நிறுவனத்திடம் இருந்து ரூ.465.73 கோடி பறிமுதல் செய்துள்ளது அமலாக்கத்துறை. 119 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.465 கோடி பணமும், ரொக்கமாக ரூ.73 லட்சமும், 2 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

7 ஆண்டுகளில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தோரின் எண்ணிக்கை 12.28 கோடி

7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில், படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை, பரங்கிமலை - சென்ட்ரல் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. தொடங்கியது முதல் இந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை, 12.28 கோடி பேர் பயணித்துள்ளனர். இந்த ஆண்டில் ஏப்ரல் 30ம் தேதி வரை 1.47 கோடி பேர் பயணித்துள்ளனர்.

இந்தியா

மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 9 பேர் பலியான சோகம்

மத்தியப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள விதிஷா, சத்னா மற்றும் குணா உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். காயமடைந்த இருவரும் 12 மற்றும் 16 வயதுடைய சிறுவர்கள்.

குடியிருந்த வீட்டை விற்று தையல் போடாத தேசியக் கொடி – நெசவாளியின் தேசபக்தி

தையல் போடாத தேசியக்கொடியை உருவாக்க ஏழை நெசவுத் தொழிலாளி ஒருவர் வீட்டை விற்று அத்தேசியக்கொடியை தயாரித்துள்ளார். அவரின் இந்தச் செயல் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். நாட்டின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி ஒருவர், ஒட்டுப் போடாமல் ஒரே துணியில் மூவர்ணக் கொடியை நெய்யும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றி கண்டுள்ளார். அதற்காக தனது வீட்டையே விற்றுக் கொடியை அவர் தயாரித்துள்ளார். மேற்கு கோதாவரியிலுள்ள வேமாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நெசவு தொழிலாளி சத்யநாராயணன், மிகுந்த தேசப்பற்று கொண்ட இவர், நீண்ட நாட்களாகத் தான் ஒரு கொடி தயாரிக்க வேண்டும், அக்கொடி தையல் போடாத கொடியாக இருக்க வேண்டும், அந்தக் கொடி செங்கோட்டையில் ஏற்றப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கனவு கண்டு வந்தார். கனவை நனவாக்க தனது வீட்டை 6 லட்ச ரூபாய்க்கு...

தில்லியில் நடைபெறவிருந்த ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டிற்குத் தடை! இந்திய அரசின் போக்கிற்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம்

தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் வகையில் தில்லியில் 30.07.2022 சனிக்கிழமை அன்று நடைபெறவிருந்த ஈழத் தமிழர் பிரச்சனைக் குறித்த மாநாட்டிற்கு இந்திய அரசு தடை விதித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். மாநாடு நடைபெறவிருந்த மண்டபத்தை காவல்துறையினர் பூட்டியதையும், தமிழ்நாட்டிலிருந்து கலந்துகொள்ள சென்ற மாணவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றி வளைத்து மத்திய காவல்படை நிறுத்தப்பட்டு அவர்கள் சிறை வைக்கப்பட்டது போன்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டது அப்பட்டமான மனித உரிமை மற்றும் கருத்துரிமை மீறலாகும். பல்வேறு நாடுகளில் நடைபெறும் இனப்படுகொலைகளைக் கண்டித்துப் பல மாநிலங்களில் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள் நடத்துகின்றன. ஆனால், ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பிரச்சனைக் குறித்து நடத்தப்பெறும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தடைவிதிக்கப்படுவது தமிழின எதிர்ப்போக்காகும். இதற்கு எதிராக மனித உரிமை அமைப்புகளும், கட்சிகளும் கண்டனக் குரல் எழுப்ப வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.

உலகம்

சீனாவில் சிக்கித் தவிக்கும் 80,000 சுற்றுலா பயணிகள்

சீனாவின் பிரபல சுற்றுலா தளமான ஹைன் தீவில் 80,000 சுற்றுலா பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர். கொரோனா காரணமாக அங்கு வார இறுதி நாட்களில் விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளால் வெளியேற முடியவில்லை. பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வரை தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு 50% தள்ளுபடி வழங்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஈரானில் பயங்கர நிலநடுக்கம் – 3 பேர் பலி பலர் படுகாயம்

ஈரானின் வளைகுடா கடற்கரை பகுதியில் உள்ள ஹர்மொஸ்கன் மகாணத்தில் இன்று (ஜூலை 2) அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்துள்ளன என்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என கருதப்படுகிறது.

நைஜீரிய தேவாலயத்தில் துப்பாக்கிசூடு – 50 பேர் பலி

நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகர் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று (ஜூன் 5) சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. தேவாலயத்திற்குள் திடீரென புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்றும் பலர் காயமடைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது.

விளையாட்டு

காமன்வெல்த் – இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கங்கள்

காமன்வெல்த் 2022 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பாக்சர் அமித் பங்கல் 48 - 51 கிலோ எடைப் பிரிவில் இங்கிலாந்து வீரரை வீழ்த்தி தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றார். மேலும் இந்திய பாக்சர் நீது கங்காஸ் 45 - 48 கிலோ எடைப் பிரிவில் இங்கிலாந்து வீரரை வீழ்த்தி தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றார். இந்தியா காமன்வெல்த்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

செஸ் ஒலிம்பியாட் – சென்னையில் குவியும் வெளிநாட்டு வீரர்கள்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை (ஜூலை 28) சென்னை மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதில் பங்கேற்பதற்காக நள்ளிரவில் மட்டும் செளதி அரேபியா, ஈரான், இத்தாலி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 321 வீரர்கள் வருகை புரிந்துள்ளனர். இந்தியாவில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

3 வருடங்களுக்கு பின் திரும்புவதில் மகிழ்ச்சி – தினேஷ் கார்த்திக்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் மூலம் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புகிறார். இது குறித்து அவர், மிகவும் மகிழ்ச்சி, பெருமை. உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல் போட்டிகளில் விளையாடினாலும் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதுதான் என் கனவு. அணியின் ஒரு பகுதியாக இருப்பதை நன்றியுடன் உணர்கிறேன் என்று நெகிழ்ந்துள்ளார்.

பொது

குழந்தைகள் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல! – தனியார் பள்ளிகள்

கோவையில் உள்ள தனியார் பள்ளியில், கள்ளக்குறிச்சி சம்பவத்திற்குப் பின், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதன்படி, மாணவர்களுக்கு பள்ளியில் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல என, பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி கையொப்பம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. கையெழுத்து போடவில்லை எனில் டிசி பெற்றுக் கொள்ள வற்புறுத்துவதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

கோவை அருகே லாரி தீ பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் உடல் கருகி பலி

கோவை அருகே சாலைப்பணிக்கு தார் கலவை ஏற்றிவந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததில் ஓட்டுநர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள குமரபுரம் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக காரமடை பகுதியில் தார் கலவை தயார் செய்யப்பட்டு, லாரிகள் மூலம் சாலைப் பணி நடைபெறும் குமரபுரம் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு கரூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஆறுமுகம்(32) என்பவர் பணியில் ஈடுபட்டு வந்தார். இன்று அதிகாலை ஆறுமுகம், வழக்கம்போல் காரமடையில் இருந்து தார் கலவையை ஏற்றிக் கொண்டு குமரபுரத்திற்கு சென்றுள்ளார். தொடர்ந்து, லாரியில் இருந்த தார் கலவையை சாலையில் கொட்டுவதற்காக ஹைட்ராலிக்கை இயக்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்பகுதி மின்கம்பியில் உரசி உள்ளது. இதில் லாரி தீப்பற்றி எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் லிவர் கம்பியை பிடித்து கீழே இறங்க முயன்றார். அப்போது, அவர் மீது...

5 மணி நேரத்தில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஆடுகள் விற்பனை படுஜோராக உள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் இன்று (7ம் தேதி) நடந்த வாரச்சந்தையில் விற்பனை களைகட்டியது. 15 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடுகள் ரூ.30 ஆயிரம் வரை விலை போனது. இங்கு வெறும் 5 மணி நேரத்திற்குள் சுமார் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

கட்டுரை

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது கருப்பட்டி காபி

சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சர்க்கரை சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஆனால் காபி குடிக்கும் போது இனிப்பு தேவையெனில், அவர்களுக்கு கருப்பட்டி சிறந்த தீர்வாக இருக்கிறது. பனை மரத்திலிருந்து உருவாக்கப்படும் கருப்பட்டி உணவு வகைகளில் இன்றியாமையாததாகும். இதில் உள்ள சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது.

பனை மரம் தமிழ்ச் சமூகத்தின் உயிர் சாட்சி

தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமைக்குரியது பனை. ஆனால், பனை தொடர்பான மக்களின் வழக்காறு என்பது பெரும்பாலும் எதிர்மறையாகவே இருந்துவந்திருக் கிறது. ‘பனை மரத்துல பாதி வளர்ந்திருக்கான், ஆனால் ஒண்ணுமே தெரியலை’, ‘பனை மரத்துக்குக் கீழ நின்னு பாலைக் குடிச்சாலும், ஊரு தப்பாத்தான் பேசும்’ என்று பனை மற்றும் பனை சார்ந்த விஷயங்கள் ஒரு நபரை அல்லது ஒரு விஷயத்தை இழிவுசெய்யவே பயன்பட்டு வருகிறது.

கொழும்பு துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை வெளியேற்றுகிறதா இலங்கை?

ஈரானின் சபாஹர் துறைமுக ரயில் திட்டத்தில் இருந்து இந்தியா விலக்கப்பட்டதை போல கொழும்பு துறைமுக திட்டத்திலும் இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது. ஈரானின் சபாஹர் துறைமுகத்தை இந்தியாவும் , அதற்கு அருகே பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை சீனாவும் தங்கள் வசமாக்கின. இதன் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் வழிப்பாதையை இருநாடுகளும் தங்களுக்கு சாதகமாக மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டன. ஆனால் காலப்போக்கில் ஈரானும் சீனாவும் நெருக்கமான உறவை மேற்கொள்ள தொடங்கின. இன்னொருபக்கம் இந்தியாவோ, அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுடனான நட்புறவில் தேக்க நிலையை உருவாக்கிக் கொண்டது. இதனால் சபாஹர் துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை விலக்குவது என ஈரான் முடிவு செய்திருக்கிறது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனைய திட்டத்தை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயக்படுத்துவதற்கு கடும் நெருக்கடி எழுந்துள்ளது. இதனால் இந்த திட்டத்தில்...
- Advertisement -